தமிழ் நாட்டில் கடந்த பதினைந்து வருடங்களாக
ஒவ்வொரு பண்ணையிலும் அதிகரித்த சராசரி பால் உற்பத்தி எவ்வளவு என்று தெரியுமா?
இரண்டு லிட்டர் கூட கிடையாது.
பதினைந்து வருடங்களுக்கு முன் பத்து கறவைகள் இருந்த ஒரு பண்ணையில் நாள் ஒன்றுக்கு நூறு முதல் நூற்று இருபது லிட் பால் உற்பத்தி செய்து கொண்டு இருந்தவர்கள் இப்பொழுதும் அதே அளவு பால்தான் உற்பத்தி செய்து கொண்டு உள்ளார்கள். இதற்க்கான மிக முக்கிய காரணம் சரியான சினை ஊசி பயன்படுத்தாததே!
ஒரு சராசரி பண்ணையாளர் தமது கறவைக்கு சினை ஊசியை
தேர்வு செய்யும் பொழுது சினை பிடித்தால் மட்டும் போதும் என்று நினைக்கக்கூடாது.
அந்த முடிவால் ஒரு மோசமான சந்ததி பிறக்க வாய்ப்பு உள்ளது. மேலும் சினைஊசியின் வம்சாவழியைப் பற்றி தெரிந்து கொள்வதும் மிக அவசியமாகும்.
No comments:
Post a Comment